பாஜக அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தில் உள்ள ஊதியச் சட்டத் தொகுப்பு (
#CodeonWages) எவ்வாறு தொழிலாளிகளை பாதிக்கும் என்ற விளக்கம்.
ஊதியம் என்பது உரிமை என்பதை மாற்றி, அதுமுதலாளியின் கருணை என்று மாற்றுகிறது
1. சொற்களில் மோசடி (Worker vs Employee) சட்டத்தின் பல இடங்களில் ‘தொழிலாளி’ (
#Worker) மற்றும் ‘ஊழியர்’ (
#Employee) என்ற சொற்கள் குழப்பமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தெளிவின்மை நீதிமன்றங்களில் முதலாளிகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்படும்.
2 . ‘ஊதியம்’ (Wages) புதிய வரையறை புதிய வரையறையின்படி, அடிப்படைச் சம்பளம் (Basic) மற்றும் பஞ்சப்படி (DA) மட்டுமே ஊதியமாகக் கருதப்படும். வீட்டு வாடகைப்படி, ஓவர் டைம், போனஸ், பயணப்படி போன்றவை ‘ஊதிய’ வரையறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ஊதியம் வழங்கப்படாதது தொடர்பான வழக்குகளில், தொழிலாளிக்கு அடிப்படைச் சம்பளம் மட்டும் கிடைக்குமே தவிர, இதர படிகள் சட்டப்பூர்வ உரிமையாகக் கிடைக்காது.
3. குறைந்த பட்ச ஊதியம் - வெறும் பரிந்துரை மட்டுமே குறைந்தபட்ச ஊதிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகள் அரசை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. மேலும், தேசிய அளவிலான அடிப்படைச் சம்பளம் (National Floor Level Wage) என்பது சட்டப்பூர்வமான கட்டாயமல்ல. இதனால் மாநில அரசுகள் குறைவான ஊதியத்தை நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
4. நிறுவனத்தின் கணக்குகளை ஆராயத் தடை போனஸ் கணக்கீட்டிற்காக, ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்குகிறதா என்பதை அறிய, அதன் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை (Audited Accounts) தொழிற்சங்கங்கள் சரிபார்க்கும் உரிமை இருந்தது. அந்த உரிமை இப்போது பறிக்கப்பட்டுள்ளது. முதலாளி சொல்வதுதான் கணக்கு.
5. ஆய்வாளர்கள் இனி ‘கண்காணிப்பாளர்கள்’ அல்ல தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் (Inspectors) இனி “ஆய்வாளர்-மற்றும்-மேம்பாட்டாளர்கள்” (Inspectors-cum-Facilitators) என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ள முடியாது; புகார் வந்தாலும் அரசின் முன் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். இது சட்ட அமலாக்கத்தைத் தடுக்கும் முயற்சி.
#LabourCodes #Tamilmarx